மழையால் பாதிக்கப்பட்ட உப்பளங்களில் மீண்டும் உப்பு உற்பத்தி துவக்கம்!

ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்புஉற்பத்தி நடைபெறுகிறது.

மழையால் பாதிக்கப்பட்ட உப்பளங்களில் மீண்டும் உப்பு உற்பத்தி துவக்கம்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.

மழையால் பாதிப்பு

இந்நிலையில் கடந்த கடந்த மாதம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழை தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு உப்பளத் தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து  இருந்தனர்.

மீண்டும் உப்பு உற்பத்தி

இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்குப் பிறகு மீண்டும் வேதாரண்யம் பகுதியில் ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில்  பாத்திகள்  சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு  வீச்சில்  துவங்கி உள்ளது.

மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு பகல் பாராமல் உப்பை உற்பத்தி செய்து சேகரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.