"இந்த உலகத்திற்கு நன்மை செய்துள்ளேன்", புதிய அப்டேட்டிற்கு காரணம் கூறும் மஸ்க்!

"இந்த உலகத்திற்கு நன்மை செய்துள்ளேன்", புதிய அப்டேட்டிற்கு காரணம் கூறும் மஸ்க்!

எலான் மஸ்க், வழக்கம் போல் புதிய வரம்புகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டர், நேற்று இரவு சர்வதேச அளவில் முடங்கியது. சில மணிநேரம் கழித்து, ட்விட்டர் பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, எலான் மஸ்க் , தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு இட்டுள்ளார்.

அதன் படி, சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளில் (அதாவது ப்ளூ டிக் சந்தாதாரர்கள்) நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும் என எலான் மஸ்க் தொிவித்துள்ளாா். 

இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், தீவிர அளவில் தேவையற்ற தரவுகளை ஒழிப்பது மற்றும் ட்விட்டரை கையாளுவது ஆகியவற்றுக்காக தற்காலிக வரம்புகளை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், இதன்படி, சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என தொிவித்துள்ளார். மேலும் சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளையும் மற்றும் புதிய சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளையும் படிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

இதையும் படிக்க: 

பின்னர், 1 மணி நேரத்தில் மனம் மாறிய மஸ்க், சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் பதிவுகளை படிக்க முடியும் என்பதை 8000 ஆகவும், சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளை படிக்க முடியும் என்பதை 800 ஆகவும் மற்றும் சரிபார்க்கப்படாத கணக்குகளை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை படிக்க முடியும் என்பதை 400 ஆகவும் விரைவில் உயர்த்தவுள்ளதாக மீண்டும் ஒரு பதிவு இட்டுள்ளார்.

பின்னர் தான் செய்த செயலுக்கு மற்றொரு காரணமாக, அனைவரும் ட்விட்டர்-க்கு அடிமையாக இருக்கிறார்கள் எனவும், அவர்கள் வெளி உலகத்தை அனுபவிக்க வேண்டும் எனவும், இந்த உலகத்திற்கு தான் நன்மை செய்துள்ளதாகவும், இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு பதிவிட்டுள்ளார்.

இன்னும் என்ன என்ன வரம்புகள் வரவிருக்கிறதோ என இணைய வாசிகள் புலம்பிய வண்ணம் உள்ளனர். 

இதையும் படிக்க: