ஏற்கனவே 47 குழந்தைகளுக்கு அப்பாவான 30 வயது இளைஞர்..! விரைவில் இன்னும் 10 குழந்தைகளாம்...!

அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் 47 குழந்தைகளுக்கு தந்தையாகி சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே 47 குழந்தைகளுக்கு அப்பாவான 30 வயது இளைஞர்..! விரைவில் இன்னும் 10 குழந்தைகளாம்...!

கலிஃபோர்னியாவை சேர்ந்த கெய்ல் கார்டி என்பவர் விந்து கொடையாளராக உள்ளார். இதுவரை இவர் விந்து கொடையளித்தன் மூலம் 47 குழந்தைகள் பிறந்துள்ளனர். இன்னும் பத்து குழந்தைகள் விரைவில் பிறக்க உள்ளனர்.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள தாய்மார்களுக்கு உதவ வாய்ப்பு கிடைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கார்டி கூறியுள்ளார்.

மேலும் தனது குழந்தைகள் இருக்கும் நாடுகளுக்கு உலக சுற்றுலா செல்ல உள்ளதாகவும் மகிழ்ச்சி பொங்க  கெய்ல் கார்டி கூறியுள்ளார்.