Doy you have Boyfriend? டெலிவரி ஏஜெண்ட் கேள்வி...வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

Doy you have Boyfriend? டெலிவரி ஏஜெண்ட் கேள்வி...வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் வாடிக்கையாளரிடம் உங்களுக்கு Boyfriend இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீப காலமாகவே, டெலிவரி ஏஜெண்ட்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல் சம்பவங்கள் இணையத்தையே அதிர்ச் சிகுள்ளாக்கி வருகின்றன. அத்துடன், டெலிவரி செய்ய வரும் ஏஜெண்ட்களை வாடிக்கையாளர்கள் அடிப்பதும், வாடிக்கையாளர்களிடம் டெலிவரி ஏஜெண்ட்கள் தவறாக நடந்துகொள்வதும் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது இணையத்தை ஸ்தம்பிக்க செய்து வருகிறது. 

இதையும் படிக்க : அறுவடைக்கு தயாராகி உள்ள நெற்பயிர்களை அழிக்கும் என்.எல். சி.நிறுவனம்!கண்ணீரில் விவசாயிகள்!!

தற்போது இந்த பட்டியலில் மேலும் ஒரு சம்பவம் இணைந்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவரிடம் டெலிவரி ஏஜெண்ட் ஒருவர் உங்களுக்கு Boyfriend இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதனை அந்த வாடிக்கையாளர் ரெடிட் என்ற செயலியில் ஸ்கீரின்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவா சிகள் டெல்வரி ஏஜெண்ட்க்கு எதிராக தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.