ஊன்றுகோல் உதவியுடன் 750கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து சபரிமலை ஐயப்பனை தரிசித்த மாற்றுதிறனாளி!!..

ஆந்திராவை சேர்ந்த மாற்றுதிறனாளி ஒருவர் 750 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார்.

ஊன்றுகோல் உதவியுடன் 750கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து சபரிமலை ஐயப்பனை தரிசித்த மாற்றுதிறனாளி!!..

ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்தவர் சுரேஷ். நகைக்கடை தொழிலாளி மாற்றுத் திறனாளியான இவர் கொரோனாவில் இருந்து உலகத்தை காக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்தார். அவர் கடந்த செப்டம்பர் 20ல் நெல்லுாரில் இருந்து புறப்பட்டார்.

ஊன்றுகோல் உதவியுடன் ஒற்றைக்காலில் 750 கி.மீ. துாரம் நடந்து, நேற்று சன்னிதானம் வந்த அவருக்கு போலீசார் உதவி செய்தனர்.பின் சிறப்பு தரிசனத்துக்கு தேவசம்போர்டு அதிகாரிகள் உதவினர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.