கேரளாவில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: பீதியில் மக்கள் ..!

கேரளாவில்  மீண்டும் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்:  பீதியில்  மக்கள் ..!

கேரள மாநிலம், இடுக்கியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருப்பதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். 

இடுக்கி மாவட்டத்தில் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் ஏற்பட்டு 170 பன்றிகள் உயிரிழந்துள்ளதையடுத்து, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.  கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வாத்திக் குடி கிராமபஞ்சாயத்தில் 15-ம் வார்டு படமுகம் என்ற இடத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பன்றி வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. 

கேரளாவில் பன்றிக் காய்ச்சல் , இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in  Tamil, Tamil Murasu

அப்பகுதியில் உள்ள பன்றி பண்ணையில் 230 பன்றிகள் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டு வந்த நிலையில் 170 பன்றிகளுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. இதனால் இடுக்கி மாவட்டம் நிர்வாகம் உத்தரவுப்படி சுகாதாரத் துறை அதிகாரிகள் பன்றி வளர்க்கும் பண்ணைகளில் நேரடியாக சென்று ஆய்வுகள் செய்து காய்ச்சலால் பாதிப்படைந்த பன்றிகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். 

மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களிலிருந்து இறைச்சிக்காக பன்றிகள் அனுப்பபட்டுள்ளதா என்று சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகளை கருணை கொலை செய்யவும் இடுக்கி மாவட்டம் நிர்வாகம் சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பல்வேறு விதமான காய்ச்சல்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் இடுக்கி மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இடுக்கி மாவட்டம் தேனி மாவட்டத்தின் மிகவும் அருகாமையில் உள்ளது தமிழக கேரள எல்லைகளை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலை ,குமுளி மலைச்சாலை மற்றும் போடி மெட்டு மலைச்சாலை ஆகிய சாலைகள் வழியாக இடுக்கி மாவட்டத்திற்கு ஏலத்தோட்ட வேலைகளுக்காக அன்றாடம் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். 

தொழில் சம்பந்தமாக ஏராளமானோர், கேரளா சென்று வருகின்றனர். கேரளாவில் பரவி உள்ள பன்றிக் காய்ச்சல் தமிழக பகுதிக்கு வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எல்லை பகுதியில் முகாம் அமைத்து நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க     | 4 வது நாளாக எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள்...அதிரடி நடவடிக்கை எடுத்த அறநிலையத்துறை!