சந்திரயான் 3 - நிலவில் ரோவர் தரையிறங்கிய காட்சிகள்! இணையத்தில் வைரல்!!

சந்திரயான் 3 - நிலவில் ரோவர் தரையிறங்கிய காட்சிகள்! இணையத்தில் வைரல்!!

நிலவில் சந்திரயான் 3 லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.


நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் ஏவியது.

தொடர்ந்து கடந்த 23ம் தேதி வெற்றிகரமாக நிலவில் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தை அடைந்த முதல்நாடு என்ற வரலாற்று சாதனையை இந்தியா படைத்தது.

இதையும் படிக்க : ஒரு நாள் பயணமாக கிரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு ராணுவ வரவேற்பு...!

இதையடுத்து லேண்டரின் வயிற்றுப் பகுதியில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி ஆய்வுப் பணிகளைத் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அசோகச்சக்கரம் மற்றும் இஸ்ரோவின் சின்னங்கள் கொண்ட ரோவர், நிலவில் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சூரிய ஒளியே படாத அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதன் மூலம் மனிதகுல தோற்றம், விண்வெளி ரகசியங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.