மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிசலுகை அளிக்கப்படாததை விமர்சித்து வைரலாகும் மீம்ஸ்!!

மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு வரிசலுகை  அளிக்கப்படாததை விமர்சித்து வைரலாகும் மீம்ஸ்!!

மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படாததை விமர்சித்து பல்வேறு தரப்பினரும் வலைதளத்தில் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, நடுத்தர மக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருப்பது வரிசலுக்கைக்காக தான்.

நடப்பாண்டு கொரோனா பரவலுக்கு பின் நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவதால், இந்த பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பில் சலுகை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பெருத்த ஏமாற்றமாக, நடுத்தர, ஏழை மக்களுக்கென ஒரு சலுகைகள் கூட அறிவிக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தியில் உள்ள நெட்டிசன்கள், அதனை விமர்சிக்கும் வகையிலான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.