கே.ஜி.எப் ஸ்டைலில் கலக்கும் நடிகர் சௌந்தரராஜா: போட்டோ வைரல்

கே.ஜி.எப் ஸ்டைலில் கலக்கும் நடிகர் சௌந்தரராஜாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

கே.ஜி.எப் ஸ்டைலில் கலக்கும் நடிகர் சௌந்தரராஜா: போட்டோ வைரல்

கே.ஜி.எப்ஸ்டைலில் கலக்கும் நடிகர் சௌந்தரராஜாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பு மூலம் எல்லோரையும் கவனிக்க வைத்தவர் சௌந்தரராஜா.

இந்நிலையில் இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் நடிகர் சௌந்தரராஜா, கே.ஜி.எப் ஹீரோ யாஷ் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.