போரில் கண்ணிவெடிகளைக் கண்டறியும் குட்டி நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உக்ரைன் போரில் வீரர்கள் மட்டுமல்ல, 2 வயது நாயும் பொதுமக்களை காக்கும் பணியில் ஈடுபட்டு பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

போரில் கண்ணிவெடிகளைக் கண்டறியும் குட்டி நாய்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உலகெங்கிலும் போர் நேரங்களில் வெடிபொருட்கள் மற்றும் கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க நாய்களை பயன்படுத்துவது  வழக்கமாக உள்ளது. அந்தவகையில், உக்ரைன் ராணுவ மோப்ப நாய்ப் பிரிவில் இரண்டு வயது ஜாக் ரஸ்ஸல் டெரியர் வகை நாயான பேட்ரன் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.

ரஷ்யாவுடனான போரில் கிட்டத்தட்ட 90 கண்ணிவெடிகளை மோப்ப சக்தி மூலம் கண்டுபிடித்து மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது பேட்ரன். இந்த நாயின் வீடியோவை உக்ரைன் ராணுவம் முகநூலில் வெளியிட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பேட்ரனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.