கால்பந்து வீரருக்கே டப் கொடுக்கும் கோழி...! முட்டையை வைத்து சிறப்பான விளையாட்டு...!

சிறந்த கால்பந்து வீரரான ரொனால்டோவுக்கு இணையத்தில் வைரலாகும் கோழியின் கால்பந்து விளையாட்டு வீடியோ சரியான போட்டியாக அமையும்...

கால்பந்து வீரருக்கே டப் கொடுக்கும் கோழி...! முட்டையை வைத்து சிறப்பான விளையாட்டு...!

பிரீமியர் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்கள வீரராகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்கு கேப்டனாகவும் இருக்கும் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு சரியான போட்டியாக அமையும் வகையில் நகைச்சுவை கிராபிக்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் கோழி ஒன்று கால்பந்தாட்ட வீரர்களை போல் முட்டையை கால்களால் உருட்டி, அதன் முதுகில் எறிந்து அதன் கழுத்து மற்றும் இறக்கைகளில் முட்டையை உருட்டி துள்ளி விளையாடுவது போன்று அருமையாகவும், நகைச்சுவையாகவும் எடிட்டிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் இருக்கும் கோழியின் ஆட்டத்தால் ரொனால்டோ, புதிய போட்டியை சந்திக் வேண்டியது வரும் என்றும் நகைச்சுவையாக கூறி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by wonderdixe (@wonderdixe)