பேருந்தில் கோழிக்குஞ்சுக்கு அரை டிக்கெட்கெட் வாங்கிய நடத்துனர்....ஷாக்கான குடும்பம்!!..

பேருந்தில் கோழிக்குஞ்சுக்கு அரை டிக்கெட் வாங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பேருந்தில் கோழிக்குஞ்சுக்கு அரை டிக்கெட்கெட் வாங்கிய நடத்துனர்....ஷாக்கான குடும்பம்!!..

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் ஹோசனகராவில் இருந்து ஷிரூரு ஊருக்கு செல்வதற்கு நாடோடிக் குடும்பம் ஒன்று கடந்த 31-ஆம் தேதி அரசு பேருந்தில் ஏறி உள்ளது. குடும்பத்தில் உள்ள நண்பர்கள் ஷிரூருவிற்கு செல்வதற்காக மூன்று பயணச் சீட்டுகள் வாங்கியுள்ளனர். பிறகு அவர்கள் வைத்திருந்த ஒரு பையிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட ஓட்டுநர் அந்தப் பையில் என்ன இருக்கிறது என்று கேட்டுள்ளார்.

இதில் கோழி குஞ்சு இருப்பதை நடத்துனர் கண்டுபிடித்துவிட்டார். அதன்பிறகு அவர்  கோழிக்கு அரை டிக்கெட் வாங்க வேண்டும் என கூறியுள்ளார்.அவர்கள் அந்த கோழியை 10 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். மேலும் அந்த குடும்பத்தினரிடம் இருந்து அதிகமாக 50 ரூபாய் வசூலித்து உள்ளார்.அரசு பேருந்தில் கோழிகளுக்கும் பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். பத்து ரூபாய்க்கு வாங்கிய அந்தக் கோழிக்கு 50 ரூபாய் பயணச்சீட்டு வசூலித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.