லட்சருபா கொடுத்து வாங்குன குதிரைக்கு சாயம் போச்சுன்னா சும்மாவா...கவுண்டமணி செந்தில் காமெடி போல முடிஞ்சுட்டு!

23 லட்சத்துக்கு வாங்கிய குதிரையை குளிப்பாட்டும் போது கவுண்டமணி செந்தில் காமெடி போல் குதிரையின் சாயம் வெளுத்தது வாங்கிய நபருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ஒரு குட்டி ஸ்டோரிய இப்ப பாக்கலாம்...

லட்சருபா கொடுத்து வாங்குன குதிரைக்கு சாயம் போச்சுன்னா சும்மாவா...கவுண்டமணி செந்தில் காமெடி போல முடிஞ்சுட்டு!

படத்துல தான் இதுவரைக்கும் மனிதன், கல்லுன்னு எல்லாத்துக்கும் பெயிண்ட் அடிச்சு ஏமாத்திட்டு வந்தாங்க... 1990-ல வெளியான “உலகம் பிறந்தது எனக்காக” படத்துல கவுண்டமணி அவருடைய தங்கச்சிக்கு சிவப்பு நிற பெயிண்ட் அடிச்சு செந்திலுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாரு... பாவம் நம்ம செந்தில் மறுநாள் அந்த பொண்ணு குளிச்சிட்டு வெளியே வரும் போது தான் தெரியும் அது சிவப்பு கலர் பொண்ணு இல்ல சிவப்பு பெயிண்ட் அடிச்ச பொண்ணுன்னு. இந்த காமெடி சீன யாரும் மறந்திருக்க முடியாது.. அதே மாறி கடந்த 2004 ஆம் ஆண்டு வந்த அருள் படத்துல காமெடி நடிகர் வடிவேலுவ செங்கள்ல வெள்ளை பெயிண்ட் அடிச்சு வெள்ளி கட்டின்னு சொல்லி யாமாத்திடுவாரு நம்ம சிங்க முத்து.. இது போன்ற ஒரு சம்பவம் தான் சமீபத்துல பஞ்சாப்ல நடந்துருக்கு... என்னன்னு பாக்குறீங்களா..ஒரு குதிரை வியாபாரி தன்னோட குதிரைக்கு கருப்பு கலர் பெயிண்ட் அடிச்சு வித்துருக்காறாம்...

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சுனம் நகரைச் சேர்ந்த ரமேஷ் சிங் என்பவர், கருப்பு குதிரை வாங்க சென்றுள்ளார். ஆனால் அவரிடம் சுனம் நகரைச் சேர்ந்த ஜதிந்தர்,  லக்விந்தர் , மற்றும் லச்ரா கான் ஆகியோர் சேர்ந்து கருப்பு குதிரை என்று கூறி பழுப்பு நிற குதிரையை வித்துருக்காங்க... ஆனா இது எதுமே தெரியுமா ரமேஷ் சிங் 23 லட்சம் கொடுத்து வாங்கின குதிரையை வீட்டிற்கு அழைத்து சென்று குளிப்பாட்டி உள்ளார். அதுவரைக்கும் பளபளவென மின்னிய கருப்பு குதிரை திடீரென பழுப்பு நிறமா மாறியதால் ரமேஷ் சிங் அதிர்ச்சியில் உறைந்து விட்டார். பின்னர் இது குறித்து ரமேஷ் சிங் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோசடி செய்த 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கருப்பு நிற குதிரைக்கு விலை மதிப்பு அதிகம் என்பதால் பழுப்பு நிற குதிரைக்கு கருப்பு நிற சாயம் பூசி ஏமாற்றி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் 3 பேர் மீதும் போலீசார் மோசடி வழக்கு பதிந்துள்ளனர்.  ஆனா இந்த ஸ்டோரில பாவப்பட்ட ஆளு  நம்ம ரமேஷ் சிங் தான்... காசுக்கு காசும் போய்... லாஸ்டுல குதிரைக்கு சாயமும் போச்சு...