போட்டோ ஷூட்டில் பிரபல  பாடகி முகத்தில் கடித்த பாம்பு; வைரல் காட்சி!

அமெரிக்காவின் பிரபல பாடகி மேத்தாவின் கன்னத்தை பாம்பு கடித்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்டோ ஷூட்டில் பிரபல  பாடகி முகத்தில் கடித்த பாம்பு; வைரல் காட்சி!
போட்டோ ஷூட்டில் பிரபல  பாடகி முகத்தில் கடித்த பாம்பு; வைரல் காட்சி!

அமெரிக்காவின் பிரபல பாடகி மேத்தா(Maeta) தன்னுடைய கன்னத்தில் பாம்பு கடித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்  நடிகர் சல்மான்கானை  நேற்று பாம்பு கடித்த சம்பவம் பெரும் வைரலானது.இதையொட்டி இன்று அமெரிக்க பாப் பாடகி ஒருவரை படப்பிடிப்பு தளத்தில் முகத்திலேயே பாம்பு ஒன்று கடித்துள்ளது.இவர் தன்னுடைய இசை ஆல்பத்துக்காக பாம்புகள் சூழ  ஒரு வீடியோவை படம் பிடித்துள்ளார்.அப்போது அவரது உடலின் மீது கிட்டத்தட்ட இரண்டு பாம்புகள் விடப்பட்டது.

பாடகி தனது மார்பின் மேல் ஒரு கருப்பு நிற பாம்பை வைத்துக்கொண்டிருந்தார்.அந்த பாம்பு கொஞ்சம் நகர்ந்து வந்தது ,அந்த நேரத்தில் அருகில் இருந்த ஒருவர் வெள்ளை பாம்பை அவர் மீது விட முயற்சி செய்தபோது அந்த பாடகி கன்னத்திற்கு அருகில் வந்த பாம்பு அவரின் முகத்தில் கடித்தது.இதனால் பதற்றமடைந்த  மேத்தா உடனடியாக அந்தப் பாம்பை தூக்கி எறிந்தார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை போட்டோ ஷூட்  நடத்துவது ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்..ஆனால் பாம்பை வைத்து போட்டோ ஷூட் நடத்தியது கொஞ்சம் ஓவராக தான் தெரிகிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Maeta (@maetasworld)