மத வெறுப்புணர்வுடன் பேசும் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர்...வீடியோ வைரலானதால் நெட்டிசன்கள் எதிர்ப்பு!

மத வெறுப்புணர்வுடன் பேசும் போக்குவரத்து புலனாய்வு காவல் ஆய்வாளர்...வீடியோ வைரலானதால் நெட்டிசன்கள் எதிர்ப்பு!

சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் மத வெறுப்புணர்வுடன் பேசும் ஆடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவர் கிறிஸ்டோபர் என்பவருடன் மத வெறுப்புணர்வுடன் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில், வாட்ஸப் குழு ஒன்றில்  கிறிஸ்டோபர் என்ற நபர் கிறிஸ்துவ பாடலை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு பதிலளித்த புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், ”கிறிஸ்டோபர் இந்த பாடலை கேட்டேன்; இது போன்ற பல பாடல்கள் உள்ளன. அதில் சிறு தண்ணீரை கிறிஸ்தவர்கள் மீது தூக்கி எறிந்தால் முடவர்கள் எழுந்து நடப்பார்கள் எனக் கூறுவார்கள். அது போன்று நடக்குமா? எனவே இது போன்ற பாடல்கள் எல்லாம் நீங்கள் போடக்கூடாது கிறிஸ்டோபர், நான் எடுத்து விட்டால் நிறைய பாடல் வரும் நான் பேசக்கூடாது என்று பார்க்கிறேன். 

இதையும் படிக்க : திமுக அமைதி பேரணியில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர் உயிரிழப்பு... !

இது இந்திய நாடு ராம ஜென்ம பூமியில் மசூதியை இடித்து விட்டு நாங்கள் கோவில் கட்டி உட்கார்ந்து உள்ளோம்.  பாராளுமன்றத்தில் செங்கோல் வைப்போம். கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் முடிந்தால் தடுத்து நிறுத்தி பாருங்கள். இங்கு முடியவில்லை என்றால் பாகிஸ்தான், சவுதி அப்படி எங்கேயாவது போய் படியுங்கள், மதப் பிரச்சினைகளை உண்டு பண்ணாதீர்கள். நாங்கள் 80 சதவீதம், நீங்கள் இருவரும் 20 சதவீதம் யாரு மெஜாரிட்டியோ அவர்களால் தான் ஆட்சி நடத்த முடியும். 

இந்த மாதிரி பாட்டு போட்டால் நானும் அதிகமாக போடுவேன் என மிரட்டும் தோணியில் பேசி உள்ள ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அனைவராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது. பொது வாழ்க்கையில் உள்ள ஒருவர் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இது போன்று கருத்துக்களை பேசலாமா என நெட்டிசன்கள் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் பொறுப்புடன் இருக்க வேண்டிய காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், மதம் தொடர்பான கருத்துக்களை ஆடியோவாக பதிவிட்டதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், இந்திய காவல் படை அவர்களின் உத்தரவின் பேரில், ராஜேந்திரனை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.