கவிழ இருந்த ஆட்டோவை கையால் தடுத்து நிறுத்திய நபர்

வளைவில் வேகமாக திரும்பியபோது, தலைக்கீழாக கவிழ இருந்த ஆட்டோவை ஒருவர் கையால் தூக்கிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கவிழ இருந்த ஆட்டோவை கையால் தடுத்து நிறுத்திய நபர்

வளைவில் வேகமாக திரும்பியபோது, தலைக்கீழாக கவிழ இருந்த ஆட்டோவை ஒருவர் கையால் தூக்கிவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தினம் ஒரு தகவல் என உற்சாகமூட்டும் வாசகங்கள், வியப்பூட்டும் வீடியோக்கள் மூலம் மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா நெட்டிசன்களுடன் உரையாடி வருகிறார். அந்தவகையில் அண்மையில் தனது டிவிட்டர் பக்கத்தில் வளைவு ஒன்றில் ஆட்டோ ஒன்று வேகமாக திரும்ப முயன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் ஆட்டோ ஓட்டுனர் வேகமாக வளைவில் திருப்ப முயன்றதன் காரணமாக ஆட்டோ தலைக்கீழாக கவிழ இருந்தது. ஆனால் இதனைக்கண்ட அங்கிருந்த ஒருவர், சற்றும் யோசிக்காமல் தனது கையால் ஆட்டோவை நிறுத்தி சமநிலைக்கு கொண்டு வந்தார். இந்த வீடியோவை வியப்புடன் வெளியிட்டிருந்த ஆனந்த் மஹிந்திரா, யாரேனும் இதனை டிஜிட்டல் தொழில்நுட்ப சொற்களில் விளக்கும்படி கூறியிருந்தார்.

https://twitter.com/anandmahindra/status/1407369628481884168