பஸ்சை மறித்து குத்தாட்டம் போட்ட மதுப்பிரியரால் வைரல் வீடியோ...

கடலூர் மாவட்டத்தில் மதுப்பிரியர் ஒருவர் உச்சகட்ட போதையில், அதிவேக பேருந்தை மறித்து, சாலையில் இறங்கி குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பஸ்சை மறித்து குத்தாட்டம் போட்ட மதுப்பிரியரால் வைரல் வீடியோ...

கடலூர் : வேப்பூர் கூட்டு ரோட்டில் நேற்று அதாவது, நவம்பர் 1ம் தேதி, மாலை நேரம் மது பிரியர் ஒருவர் தனது கச்சேரியைத் துவங்கி இருக்கிறார். அளவுக்கு மீறிய போதையால், செய்வதறியாமல் தள்ளாடி, சாலையில் இருந்த அனைவரையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.

மேலும் படிக்க | “மஞ்சப்பைய எடுத்துச் செல்ல வெட்கப்பட வேணாம்!”... சிறுவர்களின் வைரல் வீடியோ...

அது மட்டுமின்றி, தனது சக மது பிரியர் ஒருவர் அவரை தடுக்க முயற்ச்சி செய்த போது, அவரோ, தனக்கு சாமி வந்தது எனக் கூறி ஆடி இருக்கிறார். அதோடு நிறுத்தாமல் ஓடிக் கொண்டிருந்த லாரியை நிறுத்தி, அதன் முன் ஆடத் துவங்கி இருக்கிறார்.

மேலும் படிக்க | போதை ஆசாமியின் அட்டகாசம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

மேலும், பேருந்தையும் நிறுத்தி ஆட்டம் போட்டதோடு, ஓட்டுனருடன் சண்டையும் போட்டிருக்கிறார் அந்த போதை ஆசாமி... அதுமட்டுமின்றி, போதை தாளாது நடு ரோட்டிலேயே விழுந்துள்ளார். பின், அவரது தலையில் தட்டி எழுப்பிக் கூட்டி சென்றூல்லார். இந்த வீடியோ படு வைரலாகி வருகிறது.

--- பூஜா ராமகிருஷ்ணன்