வரதட்சணை கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் மோகன்லால்

பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் என்று வரதட்சணை கொடுமைக்கு எதிராக நடிகர் மோகன்லால் குரல் கொடுத்துள்ளார்.

வரதட்சணை கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் மோகன்லால்

பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம் என்று வரதட்சணை கொடுமைக்கு எதிராக நடிகர் மோகன்லால் குரல் கொடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்தவாரம் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்தும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும் கேரளா முழுக்க எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.

இந்த நிலையில், கேரளாவின் முன்னணி நடிகர் மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு' என்று அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'ஆராட்டு' படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு "வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்" என்று அழுத்தமுடன் வரதட்சணைக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Mohanlal/status/1408705180355469315