மோனெட் ஓவியத்தின் மீது பிசைந்த உருளைக்கிழங்கை வீசிய வைரல் வீடியோ...

மிகவும் பிரபலமான மோனெட் என்ற ஓவியரின் ஓவியத்தில் பிசைந்த உருளைக்கிழங்கை வீசி இரு காலநிலை ஆர்வார்கள் போராட்டம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மோனெட் ஓவியத்தின் மீது பிசைந்த உருளைக்கிழங்கை வீசிய வைரல் வீடியோ...

ஜெர்மனியில் பிரபல பிரான்ஸ் ஓவியர் மோனெட் ஓவியத்தின் மீது பருவநிலை ஆர்வலர்கள் கூழாக்கிய உருளைக்கிழங்கை வீசிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் 2050ம் ஆண்டுக்குள் மக்கள் உணவின்றி தவிக்கும் அசாதாரண சூழல் உருவாக உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்தநிலையில் ஜெர்மனி அரசு மற்றும் மக்களின் கவனத்தை ஈர்த்திடும் நோக்கில் 2 காலநிலை ஆர்வலர்கள் மோனெட் ஓவியத்தின் மீது பிசைந்த உருளைக்கிழங்கை வீசியுள்ளனர்.

மேலும் படிக்க | போதை ஆசாமியின் அட்டகாசம்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ...!

போட்ஸ்டாம் அருங்காட்சியகத்தில் ஒரு ஜெர்மன் சுற்றுச்சூழல் குழுவின் உறுப்பினர்கள் பிசைந்த உருளைக்கிழங்கை வீசினர்.  காலநிலை பேரழிவை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஸ்டண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

“மக்கள் பட்டினிகிடக்கிறார்கள், மக்கள் உறைந்து போகிறார்கள், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்" என்று காலநிலை ஆர்வலர் ஒருவரான லெட்ஸ்டே ஜெனரேஷன்ட்வீட் செய்த சம்பவத்தின் வீடியோவில் கூறினார்.

மேலும் படிக்க | பயிற்சி முடிந்த மகிழ்ச்சியில் காவலர்கள்...! நடனமாடி கொண்டாடிய வீடியோ வைரல்...!