பெண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியருக்கு தனி அறை வரவேற்கும் சபரிமாலா: வச்சு செய்யும் நெட்டிசன்கள் வைரல் வீடியோ..,

பெண் விடுதலை கட்சி நிறுவனதலைவர் சபரிமாலாவல் சர்ச்சைக்கருத்தினால் நெட்டிசனகள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பெண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியருக்கு தனி அறை வரவேற்கும் சபரிமாலா:  வச்சு செய்யும் நெட்டிசன்கள்  வைரல் வீடியோ..,

பெண் விடுதலை கட்சி நிறுவனர் சபரிமாலா இவர் அரசுக்கு எதிராக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தன்னுடைய ஆசிரியர் பணியே விட்டு விலகினார் . தற்சமயம் அவருடைய செயலால் பலரும் இவர் நல்ல வேல ஆசிரியராக இல்லை இருந்திருந்தால் பலருடைய வாழ்க்கை பாதையும் திக்குமுக்காடிடும்  என வெறுப்பாகும் அளவுக்கு நிம்மதியடைந்து வருகிறர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் எப்படி என்று.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு முஸ்லீம் பள்ளிக்கு சென்ற அவர் அங்கே அமைக்கப்பட்டிருக்கும் பள்ளி அறையின் செயல்பாட்டினை குறித்து வீடியோ பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பெண்கள் பள்ளியில்  வகுப்பின் மூளைப்பகுதியில் தனியாக  ஒரு அறை அந்த அறையில் பெண்பிள்ளைகள் படிக்கும் பள்ளி என்பதால் வகுப்பெடுக்க வரும் ஆண் ஆசிரியர் அந்த அறையினுள் அமர்ந்தே வகுப்பெடுப்பார்.

அப்படியே ஏதேனும் எழுதி காட்டவேண்டுமென்றால் இழுக்கும் கரும்பலகையில் எழுதி அதனை மற்றொரு ஆசிரியர் உதவியுடன்  அதனை வெளியில் அனுப்புவார். மாணவிகளிடமிருந்து புத்தகம் கொடுக்கனும் , வாங்கனும் என்றாலும் கூட அந்த அறையிலிருந்து, சிறிய வெளியின் வழியே கொடுப்பார் ஆண் ஆசிரியர். அதனையும் அங்கே உள்ள பெண் ஆசிரியர் வாங்கிகொடுப்பார். பெண் கல்வி, ஆண் பெண் சமம்  என காலம் மாறிக்கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற அமைப்பை தான் வரவேற்பதாகவும் சபரிமாலா தெரிவித்திருப்பது. பெரும் சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது.