எந்த உடை அணிய வேண்டும் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை - பிரியங்கா காந்தி ட்விட்

எந்த உடை அணிய வேண்டும் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை - பிரியங்கா காந்தி ட்விட்

எந்த உடை அணிய வேண்டும் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை, அதற்கான உரிமையை  இந்திய அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என முடிவெடுப்பது அவர்களுடைய உரிமை,  ஹிஜாப், ஜீன்ஸ், பிகினி என எதை வேண்டுமானாலும் அணிவது பெண்களுடைய தனிப்பட்ட முடிவு எனவும், இந்திய அரசியல் சாசனம் அதற்கான உரிமையை அவர்களுக்கு அளித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது பேசிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றம் செயல்படும் என தெரிவித்திருந்த நிலையில் பிரியங்கா காந்தி இந்திய அரசியல் சாசனம் பெண்களுக்கு வழங்கியுள்ள ஆடை சுதந்திரம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.