காலம் போன காலத்தில் வந்த நேர்காணல் கடிதம்.. மனம் குமுறும் முதியவர்!!

காலம் போன காலத்தில் வந்த நேர்காணல் கடிதம்.. மனம் குமுறும் முதியவர்!!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1987ல், 17 வயதில் பதிவு செய்த நபருக்கு, 55 வயதில் நேர்காணல் கடிதம் வந்ததால், விரக்தியடைந்த முதியவர் அரசின் ஆவணங்களை ஒப்படைக்க வந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (59). இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைக் கேட்பு கூட்டத்தில் அரசின் மூலம் வழங்கப்படும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பான் கார்டு போன்ற அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், 1987 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ததாகவும், வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதனை புதுப்பித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அரசு வேலைக்காக இதுவரை ஏழு முதலமைச்சர்களை சந்தித்து இருப்பதாகவும், அதிலும் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை இரு முறை சந்துதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு தற்போது 59 வயதாகிறது, 55 வயதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து நேர்காணலுக்கான கடிதம் கிடைத்தது. இந்த வயதில் தனக்கு வேலைகான இன்டவியூ கடிதம் வந்தது எப்படி என்று தெரியவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதால் தற்போது எனது அனைத்து ஆவணங்களையும் அரசிடமே ஒப்படைக்க வந்துள்ளேன், அவர் தெரிவித்துள்ளார்.

படித்து முடித்துவிட்டு அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எத்தனையோ இளைஞர்கள் உள்ள நிலையில், பணி கிடைத்து ஓய்வு பெற வேண்டிய வயதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து நேர்காணல் கடிதம் 55 வயதில் பெறப்பட்டது எத்தனையோ இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவு  காணல் நீராய் போகும் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது, என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: உச்ச நீதிமன்றத்தில், இலவச Wi-Fi !