மதுக்கடையில் 10ரூ தர மறுத்த மது பிரியர்... 5 ரூபாயாவது கொடுங்க என அப்பாவியாக கேட்ட ஊழியர்!

மதுக்கடையில் 10ரூ தர மறுத்த மது பிரியர்... 5 ரூபாயாவது கொடுங்க என அப்பாவியாக கேட்ட ஊழியர்!

திருவொற்றியூர் அருகே உள்ள மதுக்கடையில், கூடுதலாக 10ரூ கேட்ட கடை ஊழியரிடம், மதுபிரியர் தர மறுத்ததால், 5ரூ - ஆவது கொடுங்கள் என அப்பாவியாக கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மது விலக்கு ஆயதீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கூறிய நிலையில், பாட்டிலுக்கு பரிதாபமாக 10 ருபாய் அதிகமாக கேட்கும் ஊழியரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வடசென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் அமைந்துள்ள அரசு மதுக்கடையில், மது வாங்க வரும் மதுபிரியர்களிடம், கூடுதலாக 10 ரூபாய் வசூலித்துள்ளார், கடை ஊழியர். வரிசையில் வந்த ஒரு குடிமகன், ஏன் 10ரூ வாங்குகிறீர்கள், எனக் கேள்வி எழுப்ப, அதுக்கு அந்த கடை ஊழியர், சும்மா எல்லாம் கேட்க்க மாட்டோம், கடை வாடகை, மின் கட்டணம் எல்லாம் கட்ட வேண்டியுள்ளது. ஒரு 5ரூ- ஆவது கொடுங்க, என முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு கேட்கிறார்.

அதற்கு அந்த குடிமகனும், நான் 10 ரூ கூட தருகிறேன், ஆனால் அமைச்சர் கூடுதல் பணம் வசூலிக்கக்கூடாது என கூறியுள்ளதால் உங்களுக்கு தான் பிரச்சனை என அக்கறையுடன் கூறியுள்ளார். அதைக்கேட்ட கடை ஊழியர், அந்த பணத்தை திருப்பித் தந்துள்ளார். அதற்கு, வேண்டாம் வேண்டாம், வைத்துக்கொள்ளுங்கள், என குடிமகன், பெருந்தன்மையுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

இதையும் படிக்க: புறநகர் ரெயிலில் பயங்கர ஆயுதங்களுடன் தொடரும் மாணவர்களின் கோஷ்டி மோதல்; மக்கள் அச்சம்!