சாமியாடி சாலை வசதி கேட்ட பெண்... லட்டு கொடுத்து பதிலளித்த அமைச்சர்!!

சாமியாடி சாலை வசதி கேட்ட பெண்... லட்டு கொடுத்து பதிலளித்த அமைச்சர்!!

விழுப்புரம் அருகே நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டத்தில் இருந்த ஒரு பெண் சாமி ஆடி, சாலை வசதி கேட்க, லட்டு கொடுத்து பதிலளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் முதல் பெலாகுப்பம் வரை 93.33 லட்சம் மதிப்பிட்டில் சாலை அமைப்பதற்க்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.

அந்நேரம், ரெட்டிபாளையம் ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள்  வசதித்து வரும் மக்கள் கலந்துகொண்டனர். 

அப்போது அண்ணாநகர் பழங்குடியின பகுதியை சேர்ந்த சந்திரா திடீரென சாமி வந்து ஆடினார். சிறுது நேரம் சாமி ஆடிய சந்திராவிடம் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீங்கள் யார்னு கேட்டுள்ளார்? 

அதற்கு அந்த பெண், நான் கன்னிமார் சாமி என்று பதில் கூறியுள்ளார். மீண்டும் அமைச்சர், என்ன வேண்டும் என்று சாமி ஆடிய பெண்ணிடம் அமைச்சர் கேட்டுள்ளார். அதற்கு அப்பெண், நான் இருக்கிற ஊருக்கு சாலை அமைத்துக்கொடு என்று கூறியுள்ளார். 

அதற்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு சிலர் பாதை அளித்தால் சாலை அமைத்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அப்பெண்மணியோ, அதெல்லாம் நீ பாத்துகோ ரோடு போட்டு தா என்று உரக்க கொரலில் கூறியுள்ளார்.

பின்னர், அமைச்சர் லட்டுவை கொடுத்து சாமி ஆடிய பெண்ணை அனுப்பி வைத்துள்ளார். திடீரென்று இப்படியொரு சம்பவம் நடந்ததால், சில நிமிடங்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சிதம்பரம் விவகாரம்; 100க்கும் மேற்பட்ட பாஜவினா் கைது!