50 ஆண்டுகளில் 20 லட்சம் மக்கள் இயற்கை பேரழிவுகளால் பலி: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு...

கடந்த 50 ஆண்டுகளில் இயற்கை பேரழிவுகளால் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து இருப்பதாக ஐநாவின் உலக வானிலை அமைப்பு  தெரிவித்துள்ளது.

50 ஆண்டுகளில் 20 லட்சம் மக்கள் இயற்கை பேரழிவுகளால் பலி: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு...

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான வெப்பம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை கடந்த 50 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாகவும் ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.உயிரிழப்புகளில் 91 சதவீதத்திற்கும் அதிகமானவை வளரும் நாடுகளில் நிகழ்ந்துள்ளன என்றும் கூறி உள்ளது. இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 3.64 டிரில்லியன் டாலர் எனறும் கூறப்பட்டுள்ளது.

 ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பானது, 1979-2019 காலகட்டத்தில் நிகழ்ந்த சுமார் 11,000 பேரழிவுகளை ஆய்வு செய்துள்ளது. இதில் 3 லட்சம் உயிரிழப்பை ஏற்படுத்திய எத்தியோப்பியாவின் 1983 வறட்சி போன்ற பெரிய பேரழிவுகளும் அடங்கும். 2005ல் தாக்கிய கத்ரினா புயலால் அதிகபட்சமாக 163.61 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.