ஆப்கானிஸ்தானில் 2 கோடி இணையதளங்கள் முடக்கம்

ஆப்கானிஸ்தானில் 2 கோடி இணையதளங்கள் முடக்கம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானின் சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளனர். குறிப்பாக பெண்களுக்கான தனி பள்ளிகளில் அவர்கள் கல்வி கற்கலாம்.

அதுபோல் அங்கு ஊடகங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நிலையில் ஒழுக்கக்கேடான விடயங்களை காட்சிப்படுத்தும் 2 கோடி 30 லட்சம் இணையதளங்களை முடக்கியுள்ளதாக தலிபான் அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் நஜிபுல்லா ஹக்கானி தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதுவரை 2 கோடியே 34 லட்சம் இணையதளங்களை முடக்கியுள்ளோம். ஒன்றை தடுக்கும்போது அவர்கள் வேறு ஒரு பெயரில் இணையதளத்தை தொடங்குகிறார்கள். ஆனால், ஒழுக்கக்கேடான விடயங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்கள் செயல்பட ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டாது என்றார்.

மேலும் இது போன்ற இணையதளங்களை ஒடுக்க தலிபான் அரசுடன் ஒத்துழைக்க சில சமூக ஊடகங்கள் குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் தயக்கம் காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.