“30% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை”- ஃப்ளிப்கார்ட்

“30% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை”- ஃப்ளிப்கார்ட்

முப்பது சதவீத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப் போவதில்லை என பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட் அறிவித்துள்ளது. அமேசான், மெட்டா, ஃபோர்டு உள்ளிட்ட பெருநிறுவனங்கள் அடுத்தடுத்து பெரும் ஆட்குறைப்பில் ஈடுபட்டன.

இந்நிலையில் 70 சதவீதம் பேருக்கு மட்டும் ஊதிய உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளதாக ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதனால் சுமார் 4 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட் 10 கொண்ட மேனேஜர் மற்றும் துணைத்தலைவர் பதவியில் இருப்போர், நிறுவனம் அறிவித்த 30 சதவீதத்தினருள் வருவர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | உலக அமைதியே முக்கியம்... பிரதமர் மோடியுடன் விவாதம்!!!