கொரோனாவுக்கு 40 லட்சம் பேர் உயிரிழப்பு..! ஐ.நா பொதுச் செயலாளர் கவலை.! 

கொரோனாவுக்கு 40 லட்சம் பேர் உயிரிழப்பு..! ஐ.நா பொதுச் செயலாளர் கவலை.! 

கொரோனா பாதிப்புக்கு உலகளவில் 40 லட்சம் மக்கள் உயிரிழந்திருப்பதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியா குத்ரோஸ் கவலை தெரிவித்துள்ளார். 

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணியை பெரும்பாலான நாடுகள் தொடங்கி விட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இன்னும் கட்டுக்குள் வந்தபாடில்லை. இதனிடையே கொரோனா தொற்று பாதிப்புக்கு உலகளவில் தற்போது வரை 40 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.  

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியா குத்ரோஸ்,கொரோனா பாதிப்புக்கு 40 லட்சம் மக்கள் உயிரிழந்திருப்பது கவலையளிப்பதாகவும், இந்த வேதனையான மைல்கல், கொரோனா என்னும் கொடிய தொற்று நோயை நாம் தோற்கடிக்க இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதை நினைவூட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒத்துழைப்புடன் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு பகிர்ந்தளித்து, தொற்றை வேகமாக எதிர் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.