300 ஆண்டுகளுக்கு முன் அழிந்ததாகக் கூறப்பட்ட பெரிய பிங்க் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது!

300 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டது என பலராலும் நம்பப்பட்ட, மிகவும் பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம், சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்டது.

300 ஆண்டுகளுக்கு முன் அழிந்ததாகக் கூறப்பட்ட பெரிய பிங்க் வைரம் கண்டுபிடிக்கப்பட்டது!

தினம் தினம், இந்த பூமி நமக்கு பல புதிய மட்டும் நம்ப முடியாத பல அரிய விஷயங்களைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அரிய வகை வைரம் ஒன்று இணைந்துள்ளது.

170 கேரட் மதிப்புள்ள மிகப்பெரிய அரிய இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 300 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்ததாகக் கூறப்படும் இந்த வைரமானது, மிகப் பெரிய இயற்கை வைரம் எனக் கூறப்படுகிறது.

மத்திய ஆப்ரிக்காவின் அங்கோலா பகுதியில் உள்ள லுலோ சுரங்கத்தில், பணியாளர்கள் இந்த அரிய வகை வைரம் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த வைரம், லுலோ ரோஸ் வைரம் என பெயரிடப்பட்டுள்ளது. வைர பூமியான அங்கோலா நாட்டின் வட கிழக்குப் பகுதியில், லுலோ சுரங்கத்தில் எடுக்கப்பட்ட, வரலாற்றுக் கண்டுபிடிப்பாகக் கூறப்படும் இந்த TYPE II A வைரம், இது வரை கண்டுபிடிக்கப்பட்ட கற்களில், மிகவும் தூய்மையான மற்றும் அரிய வகை கல்- என லுகாபா வைர நிறுவனம் முதலீட்டாளர்களிடம் தெரிவித்தது. இந்த சுரங்கத்தின் அங்கொலிய அரசும் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 170 கேரட் மதிப்புள்ளதாகக் கூறப்படும் இந்த வைரமானது, பட்டைத் தீட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை வெட்டிப் பட்டைத் தீட்டும் போது தான் இந்த வைரத்தின் உண்மையான மதிப்பு தெரியவரும். பொதுவாக வைரம் பட்டைத் தீட்டுகையில், 50% மதிப்பை இழக்கும் என்பதைக் கணக்கில் கொண்டால் கூட, சுமார் 90 முதல் 100 கேரட் வரை இந்த வைரத்தின் மதிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அங்கோலாவின் கனிம வளத் துறை அமைச்சர் டயமண்டினோ அசிவெடோ பேசுகையில், “லுலோ சுரங்கங்களில், இந்த அரிய வகை வைரம் கண்டுபிடிக்கப்பட்டதால், உலகின் வைர உற்பத்தியில், அங்கோலாவின் முக்கிய பங்கு வெளிப்படையாகத் தெரிகிறது” என்றுக் கூறி பெருமிதம் கொண்டார். மேலும் இந்த வைரம், அதன் மதிப்பை விடவும் அதிக மதிப்ப்பில் விற்கும் எனத் தெரிவித்திருந்தார்.

2017ம் ஆண்டு, பிங் ஸ்டார் என்ற 59.6 கேரட் வைரம், ஹாங் காங்-கில் நடந்த ஏலத்தில், சுமார் 71.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. இந்திய மதிப்பில், ரூ. 568.833 கோடிகளாகும். இது வரை ஏலத்தில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த கல்லாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.