இரவில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து... காணாமல் போன ஆறு பேர்!!

இரவில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து... காணாமல் போன ஆறு பேர்!!

வெடிப்பிற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம்.  வெடிப்பின் போது கடுமையான வாசனையை உணர்ந்ததாக அருகில் வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.

தாமதமாகும் பணி:

பிரான்ஸ் தலைநகர் மார்செய்லியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இருப்பினும், வெடிவிபத்து காரணமாக கட்டிட இடிபாடுகளுக்குள் ஏற்பட்ட தீயால், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தாமதமாகி வருகிறது. 

திடீர் வெடிவிபத்து:

மார்சே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் வலுவான  வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த வெடி விபத்து அந்த கட்டிடத்தையும் அதன் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தையும் மோசமாக சேதப்படுத்தியது.  வெடிப்பிற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடி விபத்தின் போது வாயுவின் கடுமையான வாசனையை உணர்ந்ததாக அருகில் வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.  

பாதிப்புகள்:

வெடி விபத்தின் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து இதுவரை 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே சமயம், ஆறு பேரை காணவில்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   தைவானை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டும் சீனா...!