கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பணிக்கு செல்ல வேண்டும் - அதிரடி அறிவிப்பு

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து பணிக்கு செல்ல வேண்டும் என பிரபல நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பணிக்கு செல்ல வேண்டும் - அதிரடி அறிவிப்பு

பிரான்சில் ஊழியர்கள் தட்டுப்பாட்டால் தொழில் நிறுவனங்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில் அதனை கருத்தில் எடுத்துகொண்ட அரசாங்கம் மருத்துவ மற்றும் சுகாதார வாரியாக உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியதாக சொல்லப்படுகிறது.மேலும் கொரோனா விதி முறைகளை தளர்த்துவது குறித்தும் அறிவிப்புகள் வெளியிட்டது.

இதன்படி கொரோனா தொற்று ஏற்பட்ட சுகாதார உழியர்கள் மற்றும் மருத்துவர்கள் என அனைவரும் அறிகுறிகள் தொன்றும் நிலையில் வேலைக்கு செல்லலாம் எனவும்,அவர்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்ள தேவையில்லை எனவும் மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுபாடுகளை சரி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தற்போது நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கைகளும் உயர தொடங்குவதால் அவர்கள் மீது கவனம் செலுத்தும்  வகையில் மருத்துவ பணியாளர்கள் தேவையான் எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதையே நோக்கமாக வைத்து செயல் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படிப்பட்ட செயல் முறையினால் மற்றவர்களுக்கு பாதிப்பு பரவக் கூடும் அபாயம் இருக்கிறது எனவும் அதற்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்து கொண்டு இந்த முயற்சியில் இரங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.