ஆப்கான் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் பலி... ராணுவ வீரர்களை தண்டிக்க போவதில்லை...

ஆப்கானிஸ்தானில் தவறுதலாக நடத்தப்பட்ட ட்ரோன் தக்குதலில்10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறுக்கு காரணமான ராணுவ வீரர்களை தண்டிக்க போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கான் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் பலி... ராணுவ வீரர்களை தண்டிக்க போவதில்லை...

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட அப்பாவி பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் உள்ளூர்வாசிகள் தெரிவித்திருந்தனர்.

தவறை முதல் முறையாக ஒப்புக் கொண்ட அமெரிக்கா பயங்கரவாதிகள் என நினைத்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதாக கூறி மன்னிப்பு கோரியது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக பெண்டகன், போர் சட்டங்கள் மீறப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும்,  ஆதலால் தவறுக்கு காரணமான ராணுவ வீரர்களை தண்டிக்க போவதில்லை எனவும் பெண்டகன் அறிவித்துள்ளது.