தலிபான்களை துணிச்சலுடன் எதிர்க்கும் ஆப்கான் எதிர்ப்புக் குழு தலைவர்...

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தான் எதிர்ப்புக் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

தலிபான்களை துணிச்சலுடன் எதிர்க்கும் ஆப்கான் எதிர்ப்புக் குழு தலைவர்...

தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஆப்கானிஸ்தான் எதிர்ப்புக் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட நிலையில் புதிய அரசை அமைப்பதில் தாலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் மொத்தம் உள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றிய போதும் இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை  உள்ளது. அந்த வகையில் தற்போதும் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தாலிபான்களுடன் சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தாலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக எதிர்ப்புக்குழுவின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார். பஞ்ச்ஷிர் மீது தாலிபான்கள் நடத்தி வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.