மீண்டும் ஒரு சுனாமியா...!!!!

மீண்டும் ஒரு சுனாமியா...!!!!

இந்தோனேஷியாவில் 2009ல் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர் மற்றும் பரவலான அழிவையும் இது ஏற்படுத்தியிருந்தது.

ரிங் ஆஃப் ஃபயர்:

இந்தியாவில் 2004ல் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்திய சுனாமி  நிலநடுக்கத்துடன் இந்தோனேஷியாவிலேயே முதலில் ஆரம்பமானது. 

இந்தோனேசியா "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. அங்கு பூமியின் மேலோட்டத்தின் வெவ்வேறு டெக்டோனிக் தட்டுகள் சந்தித்து அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளை உருவாக்குகின்றன.

நிலநடுக்கம்:

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இன்று அதிகாலை முதல் அப்பகுதியை உலுக்கிய மூன்றாவது நிலநடுக்கம் என்று இந்தொனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம்  சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் உள்ள மென்டவாய் தீவுகளில்நிலநடுக்கத்தை காலை 10.30 மணிக்கு முன்பு பதிவுசெய்துள்ளது என தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அளவு முதலில் 6. 4 ரிக்டர் அளவைப் பதிவு செய்திருந்தது எனவும் ஆனால் அது 6.1 ஆக மாற்றியமைக்கப்பட்டது எனவும் செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலையில் இருந்து தொடர்ந்து மூன்று நிலநடுக்கங்கள் அதிகரித்த தீவிரத்துடன் அப்பகுதியைத் தாக்கியது, விடியலுக்கு முன் 5.2-ரிக்டர் அளவிலான நடுக்கம் பதிவு செய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் 5.4-ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மென்டாய் தீவுகள்:

மென்டவாய் தீவுகள், மாகாணத் தலைநகர் படாங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப் பகுதியான புக்கிடிங்கியில் வசிப்பவர்களால் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்,  சிறிது நேரம் வலுவாக உணரப்பட்டது என்று பேரிடர் நிறுவனத்தால் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்ச்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை, ஆனால் சைபரட் தீவில் உள்ள கட்டிடங்களுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பேரிடர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒரு சுனாமியா?

மெண்டவாய் தீவுகளில் உள்ள உள்ளூர் பேரிடர் அதிகாரி நோவ்ரியாடி செய்தியாளர்களிடம், பல கிராமங்களில் வசிப்பவர்கள் உயரமான நிலத்திற்கு வெளியேற்றப்பட்டதாகவும், உள்ளூர் தேவாலயம், பள்ளி மற்றும் சுகாதார வசதி சிறிது சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேரிடர் நிறுவனம், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும், இன்னும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க: தோல்வியுற்றதா காங்கிரஸ் அரசாங்க நீதித்துறை!!!!!வெற்றி பெறுமா மோடி அரசாங்க நீதித்துறை!!!!!