அரசுக்கு எதிரான போராட்டம்..... பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

அரசுக்கு எதிரான போராட்டம்..... பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு...

பெருவில் அரசுக்கு எதிரான போராட்ட வன்முறையில் 17 பேர் உயிரிழந்தனர். 

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  இதனையடுத்து மூத்த பெண் அரசியல்வாதியான டினா பொலுவார்டே அதிபராக பதவியேற்றார்.  இதனை தொடர்ந்து பெட்ரோ காஸ்டிலோ ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். 

இதனால் பெட்ரோவின் ஆதரவாளர்கள் பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருவின் தென் கிழக்கில் ஜூலியாகா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தின் போது போராட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:  2023ல் அதிகரிக்கும் பணவீக்கம்.....மக்களின் நிலை என்ன?!!