பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்ட இன்ஸ்டாகிராம்... ஒரே வாரத்தில் 2-வது தடவையாக பாதிப்பு...

ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை பாதிக்கப்பட்டதால், அதன் பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்ட இன்ஸ்டாகிராம்... ஒரே வாரத்தில் 2-வது தடவையாக பாதிப்பு...

உலக அளவில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவை மிகப் பெரிய சமூக வலைதளங்களாக விளங்கி வருகின்றன. அவற்றில் தங்களது கருத்துக்களை மக்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சில பயனாளிகளுக்கு நேற்று நள்ளிரவு இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலி திடீரென முடங்கியது. இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை என, 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். 

இதைப்போல பேஸ்புக் மெசஞ்சரில் செய்திகளை அனுப்ப முடியவில்லை என 800-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளன. இந்நிலையில், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதற்கு பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள அந்நிறுவனம்,  விரைவில் இந்த குறை சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி சில மணி நேரத்தில் குறைகள் சரிசெய்யப்பட்டு, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய மூன்று செயலிகளும் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக முடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.