கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும்... வெள்ளை மாளிகை உத்தரவு...

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும் என, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும்... வெள்ளை மாளிகை உத்தரவு...

அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு, கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியேற்ற அட்டை என்ற ஆவணத்தைப் பெற வேண்டும். அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள் பலர், கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சக்கி, கிரீன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உலகம் முழுதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வது தடைபட்டுள்ளதாக தெரிவித்தார்.

டிரம்ப் ஆட்சியில் கிரீன் கார்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும் என அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார் என்றும், இனி கிரீன் கார்டு வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.