ப்ளூ டிக் அங்கீகாரத்தை வழங்க கோரிய வழக்கு - மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி!!

ப்ளூ டிக் அங்கீகாரத்தை வழங்க கோரிய வழக்கு - மனுதாரருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்த நீதிபதி!!

தனது ட்விட்டர் பக்கத்திற்கு ப்ளூ டிக் அங்கீகாரத்தை வழங்க கோரி சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வரராவ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து சர்ச்சைக்குறிய பதிவுகளை பதிவிட்டு வந்த சிபிஐ அமைப்பின் இடைக்கால தலைவர் நாகேஸ்வரராவ்-ன் டுவிட்டர் பக்கத்திற்கு அந்நிறுவனம் வழங்கியிருந்த ப்ளூ டிக் அங்கீகாரத்தை ரத்து செய்திருந்தது.

இது தொடர்பாக நாகேஸ்வரராவ் வழக்கு தொடர டெல்லி உயர்நீதிமன்றம் ட்விட்டர் நிறுவனத்திற்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. இந்தநிலையில் புளூடிக் அங்கீகாரம் இன்னும் வழங்கப்படவில்லை என நாகேஸ்வரராவ் தரப்பில் மீண்டும் உயர்நீதிம்ன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி யஸ்வந்த் வர்மா அமர்வு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தான் ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அதற்கும் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசரம் என்ன என கேள்வி எழுப்பியதுடன், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.