சீனா ஹோட்டல் தாக்குதல்...ஆப்கானிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த சீனா!!!

சீனா ஹோட்டல் தாக்குதல்...ஆப்கானிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த சீனா!!!

ஆப்கானிஸ்தானின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் நாட்டை விட்டு விரைவில் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோட்டல் தாக்குதல்:

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் உள்ள சீனாவுக்குச் சொந்தமான ஹோட்டல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுமாறு சீனா தனது குடிமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.  டிசம்பர் 12 அன்று, காபூலில் உள்ள லோங்கன் ஹோட்டலை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.  வெடி தாக்குதல் மட்டுமல்லாது சிலர் ஹோட்டலுக்குள்ளும் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.  இந்த ஹோட்டல் சீனர்களிடையே மிகவும் பிரபலமானதால் அடிக்கடி சீன மக்கள் இங்கு தங்கி செல்வர்.  

மேலும் தெரிந்துகொள்க:   ஆப்கானிஸ்தானின் மீது திடீர் தாக்குதல்...நடத்தியது யார்?!!!

தாக்குதல் குறித்து:

தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறுகையில், தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜன்னலில் இருந்து குதித்த இரண்டு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் அதே நேரத்தில் நடத்திய மூவரும் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சீனா கண்டனம்:

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ​​ஆப்கானிஸ்தானில் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, வெளியுறவு அமைச்சகம் மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் குடிமக்கள் மற்றும் நிறுவனங்களை விரைவில் நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளது எனவும் முடிந்தவரை, விரைவாக வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் வென்பின்,  இது மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாதத் தாக்குதல் என்றும், சீனாவிற்கு சொந்தமான ஹோட்டல் தாக்குதல் குறித்து ஆராயுமாறு ஆப்கானிஸ்தான் தரப்பையும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  அதனுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள சீன குடிமக்கள் மற்றும் நிறுவனங்களின் பாதுகாப்பை திறம்பட வலுப்படுத்தவும் தலிபான்களுக்கு சீன தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ”இது இந்தியர்களின் நிலம்.  துரத்திய பின்னரே இறக்கும்” சீனாவிற்கு இந்திய வீரர்களின் பதிலடி...அன்று முதல் இன்று வரை!!!