எல்லை பகுதிகளில் புதிய கான்கிரீட் கட்டிடங்களை கட்டி வரும் சீனா.!!

எல்லை பகுதிகளில் புதிய கான்கிரீட் கட்டிடங்களை கட்டி வரும் சீனா.!!

கான்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உண்மையான எல்லை கோட்டுக்கு மிக அருகில் சீனா புதிய கான்கிரீட் கட்டிடத்தை கட்டியுள்ளதன் பிரத்தியேக காட்சிகள் வெளியாகியுள்ளது.

லடாக் எல்லை பகுதியில் சீனா ஒரு ஆண்டுக்கும் மேலாக பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எல்லை பகுதியில் 8 வெவ்வேறு இடங்களில் சீனா புதிய ராணுவ முகாம்களை அமைத்து வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இருந்த போதிலும் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை 13 -வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது எல்லையில் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம் என சீனா ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் கான்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சற்றே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சீனா கான்கிரீட் கட்டிடத்தை கட்டியுள்ளது. இதுபோன்று பல பகுதிகளில் கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.