குவாட் அமைப்பில் இணைகிறதா சீனா...இந்தியா எதிர்ப்பை தெரிவிக்குமா?!!

குவாட் அமைப்பில் இணைகிறதா சீனா...இந்தியா எதிர்ப்பை தெரிவிக்குமா?!!

ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான 50 வருட உறவுகளைக் குறிக்கும் வகையில் இந்த வாரம் பெய்ஜிங்கில் சீனாவின் வெளியுறவுதுறை அமைச்சர் வாங் யியை சந்திப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் பென்னி வோங், ஆஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான 50 ஆண்டுகால உறவுகளை கொண்டாடும் வகையில் இந்த வாரம் பெய்ஜிங்கில் சீனாவின் வெளியுறவு துறை அமைச்சர் வாங் யியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.  இந்த சந்திப்பு அடுத்த வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் நடைபெறும் என்றும், வெளிநாட்டு மற்றும் அரசாங்க விவகாரங்களில் சீன-ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தையின் தொடக்கத்தைக் குறிக்கும் என்றும் சீன வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மேலும் தெரிந்துகொள்க:   "இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு....” இந்தியாவை பெருமைப்ப்டுத்திய ஜப்பான்!!!

இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இது ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மாதத்தில் இந்தியாவில் குவாட் அமைப்புக்கான வெளியுறவு துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெறவுள்ள சுழலில் சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  இந்த சந்திப்பினால் குவாட் அமைப்பில் சீனாவும் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. குவாட் அமைப்பானது இந்தியாவின் ஆலோசனையால் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    கடலில் மூழ்கிய கப்பல்...31 பேர் காணவில்லை...