சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை.. யாரேனும் கேள்வி எழுப்பினால் கடும் தண்டனை - ஜி ஜின்பிங்

சீனாவின் பூஜ்ஜிய - கோவிட் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்புபவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீனாவின் பூஜ்ஜிய கோவிட் கொள்கை.. யாரேனும் கேள்வி எழுப்பினால் கடும் தண்டனை - ஜி ஜின்பிங்

கொரோனா இல்லா நாடாக சீனாவை மாற்ற அந்நாட்டு அரசு பூஜ்ஜிய-கோவிட் கொள்கை என்னும் நடைமுறையை கடைபிடித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர். இதனால் உணவு தண்ணீர் இன்றி வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் மக்கள் ஆளும் அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது பாதிப்பு அதிகம் உள்ள ஷாங்காய் நகரில் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை கடைபிடிக்கப்படுவதால் அங்குள்ள மக்கள் கடந்த 5 வாரங்களாக உணவு தண்ணீர் இன்றி பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து தங்களை காப்பாற்ற கோரி பாதிக்கப்பட்ட மக்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதை அறிந்த அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, சீனாவின் பூஜ்ஜிய-கோவிட் கொள்கை குறித்து கேள்வி எழுப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.