நிலவில் விழுந்து நொறுங்க போவது சீனாவின் ராக்கெட் பூஸ்டர்தான் - அமெரிக்க விண்வெளி ஆய்வுக்குழு உறுதி

நிலவில் விழுந்து நொறுங்கப் போவது சீனா அனுப்பிய ராக்கெட்டின் பூஸ்டர்தான் என்பதை இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்  தலைமையிலான அமெரிக்க விண்வெளி ஆய்வுக்குழு உறுதி செய்துள்ளது.

நிலவில் விழுந்து நொறுங்க போவது சீனாவின் ராக்கெட் பூஸ்டர்தான் - அமெரிக்க விண்வெளி ஆய்வுக்குழு உறுதி

வரும் மார்ச் 4-ம் தேதி ராக்கெட் பூஸ்டர் ஒன்று நிலவில் விழுந்து நொறுங்கப் போவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர். அது அமெரிக்க தொழிலதிபர் எலன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனத்தில் இருந்து 2015-ம் ஆண்டு ஏவப்பட்ட ஃபால்கன் 9  ராக்கெட் என்பதை கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், அந்த ராக்கெட்டானது 2014-ம் ஆண்டு சீனா ஏவிய ராக்கெட்டின் பூஸ்டர் தான் என்பதற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரிசோனா பல்கலைக்கழக மேற்பார்வையாளரும் இணைப் பேராசிரியருமான விஷ்ணு ரெட்டி தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. இதனை சீன விண்வெளி ஆராய்ச்சியாளர் பில் கிரேவும் ஒப்புக் கொண்டுள்ளார்.