30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா திரையீடு - ரசிகர்கள் உற்சாகம்

சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா திரையிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா திரையீடு - ரசிகர்கள் உற்சாகம்

சோமாலியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமா திரையிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா, உள்நாட்டு போரிலும், வறுமையின் பிடியிலும் சிக்கி தவிக்கிறது. உள்நாட்டுப் போர் தொடங்கியதும் 1991-ம் ஆண்டு திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. அதற்கு காரணம், தற்கொலைப்படை தாக்குதல்களுக்கான களங்களாக தியேட்டர்கள் அமைந்தது தான். இந்நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் மொகாதிசுவில் உள்ள நேஷனல் தியேட்டரில் பலத்த பாதுகாப்புடன் 2 குறும்படங்கள் திரையிடப்பட்டன.

தியேட்டரில் 750 ரூபாய் கொடுத்து, இந்த 2 குறும்படங்களை மக்கள் கண்டு ரசித்தனர்.