தொடரும் பொருளாதார நெருக்கடி.. ஈக்வடார் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்வு!!

இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பிரேசில், அர்ஜெண்டினாவைத் தொடர்ந்து ஈக்வடாரிலும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் பொருளாதார நெருக்கடி.. ஈக்வடார் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்வு!!

ஈக்வடார் நாட்டில் பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு உயர்ந்து, அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன.

இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான பழங்குடியின மக்கள் இதற்கு அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோவின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குயிட்டா நகரில் குவிந்த அவர்களை காவல்துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது  கண்ணீர் புகை மற்றும் கையெறி குண்டு வீச்சு, திருப்பித் தாக்குதல், டயர்களை எரித்தல் என நகரமே கலவரக் காடானது.

சுரங்கத் தொழில் வளர்ச்சியை நிறுத்த வேண்டும், சிறு விவசாயிகள் வங்கிகளில் கடனை அடைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளை  திணிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பழங்குடியின மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றத் தவறினால் இது காலவரையற்ற போராட்டமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளனர்.