புத்த பூர்ணிமா தலாய் லாமா வாழ்த்து...!!

புத்த பூர்ணிமா தலாய் லாமா வாழ்த்து...!!

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமா வாழ்த்து மக்களுக்கு தெரிவித்துள்ளார். 

புத்தர் அவதரித்த தினமும், ஞானம் கிடைத்த நாளும் புத்த பூர்ணிமா திருநாளாக கூறப்படுகிறது. தற்போது இந்த பண்டிகை புத்தரின் 2,585 ஆவது பிறந்த நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்ட நாளாகும்.Image

அந்தவகையில், இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் புத்த பூர்ணிமா திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகமெங்கும் உள்ள புத்தரை பின்பற்றுபவர் நல்ல சிந்தனையும் அர்த்தமுள்ள வாழ்வையும் வாழ்வதற்காக வாழ்த்தியுள்ளார். மேலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கடைபிடிக்கவும் கோரியுள்ளார்.