பொருளாதார அவசரநிலை அறிவிப்பு: திண்டாடும் இலங்கை மக்கள்!

இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக விலைவாசி அதிகரித்ததால், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவதற்காக, பொருளாதார அவசரநிலையை அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச பிறப்பித்துள்ளாா்.

பொருளாதார அவசரநிலை அறிவிப்பு: திண்டாடும் இலங்கை மக்கள்!

இலங்கையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக விலைவாசி அதிகரித்ததால், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவதற்காக, பொருளாதார அவசரநிலையை அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச பிறப்பித்துள்ளாா்.

இலங்கையில், பொருளாதார அவசரநிலை நேற்று முன்தினம் இரவு அமலுக்கு வந்தது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அரிசி, சா்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை அதிகரித்தது. பால் பவுடா், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

இதையடுத்து, பதுக்கல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்த முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை அத்தியாவசிய சேவைகள் ஆணையராக அரசு நியமித்துள்ளது.  அரசி, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அரசு நிா்ணயித்த விலைக்கு அல்லது இறக்குமதி மீதான வரிக்கு உள்பட்டு வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும் என்றும், சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் அத்தியாவசியப் பொருகள்களைப் பதுக்கினால் அவற்றைப் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையில் வாகனங்கள், சமையல் எண்ணெய், மஞ்சள், சமையல் பொருள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தடை விதித்தது. கடந்த சில வாரங்களில், கரன்சி மதிப்பு குறைந்ததாலும், கொரோனா காரணமாக சா்வதேச சந்தையில் விலைவாசி அதிகரித்ததாலும், இலங்கையிலும் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்தது. உள்ளூரில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வட்டி விகிதத்தை இலங்கை மத்திய வங்கி 2 வாரங்களுக்கு முன் உயா்த்தியது. இந்நிலையில், பொருளாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.