அமெரிக்காவில் சீனாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்...காரணம் என்ன?!!

அமெரிக்காவில் சீனாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்...காரணம் என்ன?!!

சீனாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து உலக மனித உரிமைகள் தினத்தன்று அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

வங்காளதேச படுகொலை:

1971 ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவம் வங்காளதேசத்தில் இருந்த மக்களைக் கொன்று குவித்தது. இந்தப் படுகொலையில் சுமார் 30 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  1971 வங்காளதேச இனப்படுகொலைக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் குழு பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தது. 

கோரிக்கை மனு:

மாநாட்டிற்குப் பிறகு, டிசம்பர் 10 அன்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று, இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் ராபர்ட்டா மெட்சோலாவிடம் ஒரு குறிப்பாணை சமர்ப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், மியான்மரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிக்கவும், இதனால் ரோஹிங்கியா அகதிகள் பாதுகாப்பாக திரும்ப முடியும் என்றும் ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டனர்.  

எதிரான ஆர்ப்பாட்டங்கள்:

மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 அன்று அமெரிக்காவின் பல நகரங்களில் சீனாவில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  சீன அரசைக் கண்டித்தும், திபெத்திய பௌத்தர்கள் மற்றும் உய்குர் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு எதிரான கலாச்சார அழிவை நிறுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.  சியாட்டில், வாஷிங்டன், போர்ட்லேண்ட், நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள சீன தூதரகம் மற்றும் சீன நிறுவனங்களுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   மத்திய அமெரிக்காவில் எரிமலை வெடிப்பு!!!