ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு... டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறை...

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறை

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு... டெரிக் சாவினுக்கு 22 ஆண்டு 6 மாதம் சிறை...
அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு உயிரிழந்தார்.
 
ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் வெடித்தது. 
 
4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டது.  இவர்களில் டெர்ரிக் சவுரின் என்ற போலீஸ் அதிகாரி தான் ஜார்ஜ் பிளயாட் கழுத்தை இடது முட்டியால் நெருக்கினார். அதனை சக போலீசார் மூன்று பேர் வேடிக்கை பார்த்தனர்.
 
டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 
நீதிமன்றத்தில் தகுந்த ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நான்கு போலீசாருக்கும் அதிகபட்சமாக 40 ஆண்டுகள் கடுங்கால் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு ஊடகங்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டு, அவருக்கு  22 ஆண்டு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.