மனிதனுக்கும் வால் இருந்ததா......????விஞ்ஞானிகள் தகவல்....!!!!

மனிதனுக்கும் வால் இருந்ததா......????விஞ்ஞானிகள் தகவல்....!!!!
நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான வால் கொண்ட விலங்குகளின் புதைபடிவங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  ஆரம்பகாலத்தில் மீன்கள் கடல் வழியாக நீந்தவும் வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்கவும் விசிறி போன்ற வால்களை துடுப்புகளாக பயன்படுத்தின.
 
மீன்கள் நிலத்தில் வாழும் உயிரினங்களாக பரிணாமம் அடைய தொடங்கியதால் அவற்றின் வால்கள் மாறத் தொடங்கின.
 
ஊர்வன, பூச்சிகள், பறவைகள் அல்லது பாலூட்டிகளாக இருந்தாலும் அவற்றின் வால்கள் பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுகின்றன.
 
உடல் சமநிலை:
 
டைனோசர்கள் இரண்டு கால்களில் நடக்கும் போது அவைகளுடைய கனமான தலை மற்றும் உடலை சமன்படுத்த வால்களை பக்கவாட்டாக சுழற்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  வாலின் இயக்கம் இரையை பிடிக்க வேகமாக ஓட பயன்பட்டது. 
 
பூனை போன்ற சுவர் மரம் ஏறும் விலங்குகளுக்கு உடலை சமன்செய்ய வால் பயன்படுகிறது.
 
குரங்குகள் மரம் விட்டு மரம் தாவும் போது வால்கள் கிளைகளை இறுக பிடிக்க பயன்படுகிறது.
 
மூன்றாவது கால்:
 
கங்காரு நிலத்தில் குதிக்கும் போது உடலை சமநிலை செய்ய வாலை பயன்படுத்துகின்றன.  கங்காருவின் வால் அவற்றின் மூன்றாவது காலாகவும் பயன்படுகிறது.
 
தற்காப்பு பொருள்:
 
சில விலங்குகள் வால்களை பிற விலங்குகளிடமிருந்து அவற்றை தற்காத்து கொள்ள பயன்படுத்துகின்றன.
 
திருக்கை மீனின் வால் கொடுக்காக பயன்படுகிறது.   ராட்டில்ஸ்னேக் வாலை பிற விலங்குகளை அச்சுறுத்த பயன்படுத்துகிறது.
 
ஒட்டகசிவிங்கி, காட்டெருமை, பசுக்கள், குதிரைகள் போன்ற விலங்குகளின் வால்கள் நீளமாக உள்ளன.  அவற்றை அவை பூச்சிகளை விரட்ட பயன்படுத்துகின்றன.
 
தகவல் தொடர்பு பொருள்கள்:
 
பறவைகள் அதனுடைய வால்களை பறக்கும் போது உடலை சமன்செய்ய பயன்படுத்துகின்றன.  சில பறவைகள் அவற்றின் வால்களை அதனுடைய இணைய கவர்ந்திழுக்க பயன்படுத்துகின்றன.
 
நாய்கள் அவற்றின் வாலை தொடர்பு சாதனமாக பயன்படுத்துகினறன.  நாய்கள் உற்சாகமாக இருக்கும் போது வாலை ஆட்டுவதை கவனிக்கலாம்.
 
மனிதனுக்கும் வாலா:
 
மனிதர்களுக்கு குரங்குகளை போல நீண்ட வால் இல்லை எனினும் மயில்களை போல அழகான வால் இல்லை எனினும் முன்னோர்களுக்கு வால்கள் இருந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையர்களைடமிருந்து வால்கள் மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  மனிதன் நிமிர்ந்து நடக்க தொடங்கியவுடன் அவனுக்கு வாலின் தேவை இல்லாததால் அது மறைந்து விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.